search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் காம்பிர்"

    இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தவருமான கவுதம் காம்பிர் கணித்து உள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காம்பிர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு நுழையும். உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோலியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். பந்து வீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

    இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

    உலகக்கோப்பையை வெல்ல 2-வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.



    2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதத்தை தவறவிட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக்கோப்பையை வெல்வதே. எனது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 97 ரன் என்பது அணிக்கு முக்கியமானது. 3 ரன்னில் சதத்தை நழுவ விட்டதற்காக நான் வருத்தம் அடைந்தது கிடையாது.

    நானும் டோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது முக்கியமானது. இறுதிப் போட்டியில் நான் எந்தவித நெருக்கடியுடனும் ஆடவில்லை.

    இவ்வாறு காம்பீர் கூறினார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகிறது.

    உலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
    கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’-தான் என கவுதம் காம்பிர், மீண்டும் அவரது திறமை குறித்து சாடியுள்ளார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்சிபி-யில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் கேப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதுவரை அவரை ஆர்சிபி கேப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் காம்பிர் கூறியிருந்தார். இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.

    இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘பேட்டிஸ்மேன் என்பதில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறகிறேன். தொடர் தொடங்கும்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

    பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்தார்.

    அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’ என்றார்.
    விராட் கோலியை தொடர்ந்து கேப்டனாக வைத்திருப்பதற்காக, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நன்றி செல்ல வேண்டும் என காம்பிர் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் தலா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கியமான வீரர்கள் விளையாடினாலும் அந்த அணியால் வெற்றி மகுடம் சூட்ட முடியவில்லை. இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2013-ல் இருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.



    கோப்பையை பெற்றுக்கொடுக்காவிடிலும் தொடர்ந்து விராட் கோலியை அந்த அணி கேப்டனாக வைத்து வருகிறது. அதற்காக விராட் கோலி அந்த அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியை டோனி மற்றும் ரோகித் சர்மா உடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது. விராட் கோலியை சிறந்த அல்லது சூழ்நிலையை சிறப்பாக சமாளிக்கும் கேப்டனாக நான் பார்க்கவில்லை. அவர் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.

    அவரது சாதனையை வைத்துதான் சிறந்த கேப்டனா? என்பதை தரம் பார்க்க முடியும். அந்த வகையில் விராட் கோலி இன்னும் கோப்பை வெல்லவில்லை. எம்எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியார் தலா மூன்று முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் டோனியுடன் விராட் கோலியுடன் ஒப்பிட இயலாது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக அவர் கடந்த 7 சீசனில்தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.



    விராட் கோலி மிகவும் அதிர்ஷ்டசாலி. அத்துடன் ஆர்சிபி அணிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்னும் அவரை கேப்டனாக வைத்துள்ளது. ஒரு அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாதவர்கள் ஒரு அணியில் அதிக வருடங்களாக கேப்டனாக நீடிக்க முடியாது.

    ஐபிஎல் தொடரில் தவறான முடிவு எடுத்தால், பின்னர் தோல்வியடைய வேண்டியதுதான். மிகப்பெரிய போட்டிகளில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இல்லை. சரியான பேலன்ஸ் கொண்ட அணியைத் தேர்வு செய்யும்போது, அந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும்’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த கவுதம் காம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #Gambhir #GautamGambhirRetires #GautamGambhir
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

    கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கவுதம் காம்பிருக்கு கடந்த சில வருடங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.



    இந்நிலையில் இன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 37 வயதாகும் கவுதம் காம்பீர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார்.
    ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகியுள்ளார். ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணா 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஈடன் கார்டனில் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.

    நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தினார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்.

    நேற்று அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்து விட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் கவுதம் காம்பிர் சதம் அடிக்க ஹரியானாவிற்கு எதிராக டெல்லி எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒரு ஆட்டத்தில் பீகாரை மும்பை அணி எளிதில் வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹரியானா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பிஷ்னோய் 117 பந்தில் 85 ரன்களும், சண்டிலா 88 பந்தில் 59 ரன்களும் சேர்க்க 49.1 ஓவரில் 229 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது ஹரியானா. டெல்லி அணி சார்பில் சைனி 3 விக்கெட்டும், கெஜ்ரோலியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக கவுதம் காம்பிர் களம் இறங்கினார். நேற்று அவருக்கு பிறந்த நாளாகும். 37 வயது முடிவடைந்து 38-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் காம்பிர் பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு வேடிக்கை நிகழ்த்துவாரா? என்ற எதிர்பார்த்து இருந்தது.

    இந்த எதிர்பார்ப்பை சற்று கூட வீணடிக்காமல் காம்பீர் 72 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது சதத்தால் டெல்லி அணி 39.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்கள் தவறானது என்பதை நிரூபிப்பார் என்று கவுதம் காம்பிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. விக்கெட் கீப்பருடன் தலைசிறந்த ஃபினிஷராகவும் திகழ்ந்தார். வயதாக வயதாக எம்எஸ் டோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவரது தொய்வாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை மிடில் ஆர்டர்கள் சரியாக அமையாததாலும் இந்தியா முக்கியமான ஆட்டத்தில் திணறி வருகிறது.

    டோனியின் ஆட்டம் எப்படி இருந்தாலும் 2019 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார் என்று தேர்வுக்குழு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதனால் டோனிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், டோனிதான் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த் முதன்மை பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் சிறப்பான ஆட்டம்தான் முதல் அளவுகோல் என்று டோனியின் ஆட்டம் குறித்து கவுதம் காம்பிர் சூசகமாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘சிறப்பான ஆட்டம் (Performance) என்ற ஒரே அளவுகோலால் மட்டுமே அணியில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்க முடியும். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், இந்திய அணியில் ஒரு அங்கமாக பங்கேற்க இயலாது.

    வயது ஒரு பிரச்சனை அல்லை. டோனி சிறப்பாக விளையாடி, விமர்சனங்கள் தவறானவை என்பதை நிரூபிக்க விரும்புவார் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
    ×